Sunday, November 30, 2008

தீ

வெளியில் சில்லென்ற காற்று
ஆனால் என் மனதிலும், உடலிலும்
ஓர் தீ பற்றி கொண்டது
மூச்சு அல்லாடியது
என் மௌனம் பேசியது
உனக்கு அது புரியறதா?

Thursday, November 27, 2008

ஆசை

மழையின் துளிகள் தரையில் விழும்போது,

என் ஆசைகள் மண்ணில் கலந்துவிடும் போது,

நீ அங்கே வா கண்ணே,

தண்ணீர் துளிகளை கையில் ஏந்திக்கொள்

என் ஆசைகளை கரைய விடாதே ...

என் நெஞ்சை கலங்க விடாதே ...

வா அருகே வா,

என்னை அணைத்துக்கொள்

புஜத்தில் ஏந்திக்கொள்

என்னை உன்னில் ஏற்றிக்கொள் !